செய்யூர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை : 17 வயது சிறுவன் கைது

செய்யூர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை : 17 வயது சிறுவன் கைது
X

செய்யூர் சிறுமி கொலை வழக்கில் சிறுவனை கைது செய்த சதுரங்கப்பட்டினம் போலீசார்

செய்யூர் சிறுமி கொலை வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே சதுரங்கபட்டினம் காவல் எல்லைக்குட்பட்ட வெங்கம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் காணாமல் போன 11வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் முட்புதருக்குள் நேற்று உடல் கண்டெடுக்கப் பட்டது.

இதனையடுத்து சிறுமியின் உடலை மீட்ட சதுரங்கப்பட்டினம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணையை துவக்கினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் இதில் 17 வயது சிறுவன் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுமி அதிக கூச்சலிட்டதால் தலையில் கல்லால் அடித்ததாகவும் சிறுமியை நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் கற்பழிக்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து 17 வயது சிறுவனை பிடித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளதாக சதுரங்கப்பட்டினம் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!