ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஆரராகுல்நாத்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, மதுராந்தகம் கோட்ட வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, மதுராந்தகம் கோட்டம், மதுராந்தகம், அச்சரப்பாக்கம் மற்றும் சித்தாமூர், ஊராட்சி ஒன்றியங்களில் பதற்றமான வாக்குச்சாவடிமையங்கள், வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் தேர்தல் நடத்தும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் ஆரராகுல்நாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊர்க உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாமண்டூர் ஊராட்சி வடபாதி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாமண்டூர் ஊராட்சி தென்பாதி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மற்றும் புக்கத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் பொது மக்களிடம் அனைவரும் சதவீதம் வாக்களிக்குமாறும், வாக்களிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அனைவரும் பதற்றமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அச்சரப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு சாவடி மையத்தினையும், தேர்தல் நடத்தும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினையும் மற்றும் அச்சரப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிவறை மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளப்பாதை, சக்கர நாற்காலி போன்ற முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூனாம்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தினை பார்வையிட்டார் இந்நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் .ஆதார்ஸ்பச்சோரோ, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெயதீபன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!