சித்தாமூர் ஒன்றியத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம்

சித்தாமூர் ஒன்றியத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம்
X

விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சித்தாமூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது

சித்தாமூர் ஒன்றியத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டத்தில் 36 பகுதிகளில் சிலை வைத்து வழிபட இந்து அமைப்பினர் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சித்தாமூர் காவல் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் தலைமை தாங்கி நடத்தினார். இதில் கொரோனோ வைரஸ் நோய் தடுப்பு காரணமாக விநாயகர் சிலை வைத்து பொது இடங்களில் வழிபட தடை உள்ளது. என்பதை வலியுறுத்தி ஆய்வாளர் பேசினார். அதற்கு இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட 36 தனிநபர் இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் சித்தாமூர் ஒன்றிய பாஜக செயலாளர் ஆர் எஸ்.ரஞ்சித், முன்னாள் மண்டல தலைவர் கார்த்திகேயன்,மாவட்ட பாஜக விவசாய அணி உறுப்பினர் தேவி லிங்கம், இந்து முன்னணி கிளைத் தலைவர் பிரபாகரன், ஆர்.எஸ்.எஸ் ஒன்றிய செயலாளர் மணி, உள்ளிட்ட இந்து முன்னணி, பாஜக, ஆர்.எஸ்.எஸ், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!