இடைக்கழிநாடு அமமுக நிர்வாகி நினைவேந்தல்

இடைக்கழிநாடு அமமுக நிர்வாகி நினைவேந்தல்
X

அமமுக துணை செயலாளர் சுப்பிரமணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

அமமுக துணை செயலாளர் சுப்பிரமணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி முதலியார்குப்பம் 3வது வார்டுக்குட்பட்ட மறைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை செயலாளர் சுப்பிரமணியின் நினைவேந்தல் மற்றும் படம் திறப்பு விழாவிற்கு நேரில் சென்று அன்னாரது குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் இடைக்கழிநாடு ஐய்யனாரப்பன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர். இதில் பேரூர் செயலாளர் சரண்ராஜ், பேரூர் அம்மா பேரவை செயலாளர் சங்கர் மற்றும் மாரிமுத்து, கர்ணா, நாகராஜ், ராஜாராம், தங்கதுரை, ராஜேஷ், ரவிச்சந்திரன், வேல்முருகன், மற்றும் பேரூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!