சித்தாமூர் அருகே தரமற்ற தார்சாலை: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சித்தாமூர் அருகே தரமற்ற தார்சாலை: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
X

தரமற்ற சாலை அமைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 

சித்தாமூர் அருகே தரமற்ற தார்சாலை அமைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இரும்புலி கிராமம் இக்கிராமத்திற்கு பாரத பிரதமரின் தார் சாலை பராமரிப்பு பணியில் மதிப்பீட்டு தொகை ரூபாய் 45.96 லட்சத்தை முறைகேடாக பயன்படுத்திய தனியார் ஒப்பந்ததாரர் பழனிச்சாமியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஏற்கனவே தரமாக இருந்த தார் சாலையை சீரமைக்கும் பணி என்ற பெயரில் அரசாங்க நிதி ரூபாய் 45.90 லட்சத்தை முறைகேடாக பயன்படுத்தி போடப்பட்ட தரமற்ற சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என இரும்புலி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!