கல்பாக்கம் அருகே இடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியல்

கல்பாக்கம் அருகே இடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியல்
X

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

கல்பாக்கம் அருகே இடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சூராடிமங்கலம் பகுதியில், அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான இடுகாட்டு பாதையை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, அப்பகுதியில் வசிக்கும் நாகராஜன் என்பவர் மனைவி மாரியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு அவ்வழியாக செல்லக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டாட்சியர் சிவசங்கர் இந்தப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்றும், ஆக்கிரமிப்பை அகற்றுவதாகவும் உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!