செய்யூர்: தூய்மைப் பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

செய்யூர்: தூய்மைப் பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்
X

செய்யூரில் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

செய்யூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் அதிமுக சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுகவின் மாவட்ட பிரதிநிதியும் புதுப்பட்டினம் வணிகர் சங்க தலைவருமான ம.காதர் உசேன் ஏற்பாட்டில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது.

இதில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயலாளர் தினேஷ், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாதிக் பாஷா, ஒன்றிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் எம் என்.காதர் பாஷா மற்றும் அன்வர் பாஷா, ஜாகிர் உசேன், ஷேக் ஆதம், ராமசந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!