செங்கல்பட்டு அருகே கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைப்பு

செங்கல்பட்டு அருகே கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைப்பு
X

கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி குணா என்கிற குணசீலர்.

செங்கல்பட்டு, சூனாம்பேடு அருகே கஞ்சா வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூணாம்பேடு போலீசாருக்கு கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த மணியின் மகன் குணா என்கிற குணசீலர் (வயது 34 ). இவர் சூனாம்பேடு ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்ற குற்றத்திற்காக சூனாம்பேடு காவல் ஆய்வாளர் மதியரசன் தலைமையில் போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பரிந்துரையின் பேரில், நேற்று சென்னை மத்திய சிறையில் இருந்த குற்றவாளி குணா என்கிற குணசீலனை குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!