மின்தடை இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் மூலம் புதிய மின்மாற்றிகள் திறப்பு

மின்தடை இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் மூலம் புதிய மின்மாற்றிகள் திறப்பு
X

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் திறந்து வைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர்

தமிழக முதல்வரின் கனவு திட்டமான மின்தடை இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் மூலம் புதிய மின்மாற்றிகள் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக முதல்வரின் கனவு திட்டமான மின் தடையில்லா தமிழகம் என்ற திட்டத்தின் மூலம் சூணாம்பேடு, மடையம்பாக்கம், மேல்மருவத்தூர், வன்னியநல்லூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 9 புதிய 25KVA மின்மாற்றிகளை சுமார் 4 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு இருந்தது.

இதனை செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு, ஒன்றிய செயலாளர் சிற்றரசு, ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இதன் மூலம், பொதுமக்களுக்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்கும் என்பதால் கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் கிறிஸ்டோபர் லியோராஜ், கிருபானந்தன், உதவி செயற்பொறியாளர்கள் தனசேகரன், மகேஸ்வரன், துரைராஜ், மற்றும் பிரிவு பொறியாளர்கள் உள்ளிட்ட மின்வாரிய துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future