நீங்க யாரும் சாதியை பார்த்து ஓட்டு போடாதீங்க : சீமான்

நீங்க யாரும் சாதியை பார்த்து ஓட்டு போடாதீங்க : சீமான்
X

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நீங்க யாரும் சாதியை பார்த்து ஓட்டு போடாதீங்க என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

தமிழர் என்று நினைத்து ஓட்டு போடுங்க, சாதி பார்த்து ஓட்டு போடாதீங்க என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. உள்ளாட்சி தேர்தல் களத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

முதலாவதாக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் சீமான் பேசியதாவது:

நீங்க யாரும் சாதியை பார்த்து ஓட்டு போட வேண்டாம். தமிழர் என்று நினைத்தால் வாக்களியுங்கள். தமிழனுக்கு அடையாளம், பெருமை இருக்கக்கூடாது என்று திராவிட கட்சிகள் நினைக்கின்றன.

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 7 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறோம். ஒற்றுமையாக இருந்தால் 10 சதவீதத்தை பிடித்திருக்கலாம். விரைவில் அந்த காலம் வரும்.

உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரிது விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!