சித்தாமூர் ஒன்றியத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, செய்யூர் எம்எல்ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் திருமண உதவி நிதி, தாலிக்கு தங்கம் ஆகியவற்றை எம்எல்ஏ பனையூர் பாபு வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சித்தாமூர் ஒன்றிய அலுவலக அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சங்கீதா வரவேற்றார். செய்யூர் சட்டமன்ற தொகுதியின் விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பனையூர்.மு.பாபு,
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, ஒன்றியத்திற்குட்பட்ட ஏழைப் பெண்கள் 70 நபர்களுக்கு தாலிக்கு தலா 8 கிராம் தங்கம் வழங்கினர்.
இந்த விழாவில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானப்பிரகாசம், பரணி, சித்தாமூர் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தனசேகரன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ஆதவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சித்தாமூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu