மதுராந்தகம்: பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கிய தனியார் அறக்கட்டளை!

மதுராந்தகம்: பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கிய  தனியார் அறக்கட்டளை!
X
தனியார் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியபோது.
மதுராந்தகம் அருகே தனியார் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த புளியரணங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊராட்சி செயலாளர் மோகன் தலைமையில் நியூ லைஃப் அறக்கட்டளை மற்றும் திருக்கழுக்குன்றம் ரெயின்போ'ஸ் அறக்கட்டளை ஆகிய இரண்டு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் அதன் நிறுவனர்கள் கோதண்டன், மற்றும் செல்வகுமார் ஆகியோர் ஆதரவற்ற முதியோர் மற்றும் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு உணவு மற்றும் நோய் தொற்று பரவாமல் தடுக்க கபசுர குடிநீர், முக கவசம் உள்ளிட்டவைகளை வழங்கினர்.

வெளியில் செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி தமிழக அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டதுடன் கொரோனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில் இயக்குனர்கள் நித்யானந்தம் கோகுல்ராஜா, சமூக ஆர்வலர்கள் டாப்ஸ்டோர் முத்து, கிருஷ்ணமூர்த்தி தூய்மை பணியாளர் லட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!