கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
பராமரிப்பு பணிகளுக்காக கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையத்தில் 2-வது அலகு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினம் கடலோரத்தில் மத்திய அரசின் நிறுவனங்களான இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு சக்தி ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் உட்பட அணுசக்திதுறையின் பல பிரிவுகளில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில் சென்னை அணுமின் நிலையத்தில் மட்டும் இரு அலகுகள் மூலம் தலா 220 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்த 2 அலகுகளும் 2 வருடங்களுக்கு ஒருமுறை பராமரிப்பு காரணங்களுக்காக தனித்தனியாக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்தததும் மீண்டும் மின்உற்பத்தியைத் தொடங்கும். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அலகு இயந்திரக் கோளாறு காரணமாக மின்உற்பத்தியை நிறுத்தியது. 2 ஆவது அலகில் மட்டும் தொடர்ந்து மின்உற்பத்தியைச் செய்து வருகிறது. எனவே தற்போது 220 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது.இந்நிலையில் 2-வது அலகும் பராமரிப்புப் பணிகளுக்காக மின்உற்பத்தியை நிறுத்தப்பட்டுள்ளது. முழுமையான பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் உற்பத்தி தொடங்கும் என தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu