விவசாயிகள் சங்க முயற்சியில் 100 தலித் குடும்பங்களுக்கு இலவச கோழிக் கூண்டுகள்
மதுராந்தகம் வட்டம் வள்ளுவப்பாக்கம் , சித்தாமூர் கிராமங்களில் தலித் மக்களுக்கு கோழிக்கூண்டு வழங்கப்பட்டது
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முயற்சியால் ஐதராபாத்தில் செயல்பட்டுவரும் ஐசிஎஆர் கோழி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து 100 தலித் குடும்பங்களுக்கு கோழிக் கூண்டுகள் வழங்கப்பட்டது.
ஐதராபாத்தில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் ஐசிஎஆர் கோழி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் 50 தலித் குடும்பத்தினர்களுக்கும், சித்தாமூர் ஒன்றியம் கயநல்லூர் கிராமத்தில் 50 தலித் குடும்பங்களுக்கும் ரூபாய் 7ஆயிரம் மதிப்புள்ள கோழி கூண்டுகள் வழங்கப்பட்டது. மேலும் வருகின்ற மே மாதம் கூண்டுகளில் வளர்ப்பதற்கு கோழிகளும், தீவனங்களும் வழங்கப்பட உள்ளது.
வள்ளுவப்பாக்கம், கயநல்லூர் ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.மோகனன் தலைமையில் நடைபெற்ற கோழிக்கூண்டு வழங்கும் நிகழ்ச்சியில் கோழி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மருத்துவர்கள் சண்முகம், கண்ணன், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோழி வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தலித் மக்கள் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வது குறித்தும் பேசினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜா, நிர்வாகிகள் ராஜேந்திரன், மகேந்திரம், ஜம்புலிங்கம், அனுசுயா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu