கல்பாக்கம் அருகே பாலற்றில் வெள்ளம் :ஆற்று நீர் குடியிருப்புகளில் புகுந்தது

கல்பாக்கம் அருகே பாலற்றில் வெள்ளம் :ஆற்று நீர் குடியிருப்புகளில் புகுந்தது
X

கல்பாக்கம் அருகே மீன கிராமத்தில் வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்

கல்பாக்கம் அருகே பாலற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடியிருப்புகளில் நீர் புகுந்தது, பொது மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்று பாலம் மூழ்கி பாலத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது,

ஆற்று நீரானது கடலூர் சின்னகுப்பம் மீனவர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர், உடனடியாக தகவல் அறிந்த மதுராந்தகம் கோட்டாட்சியர் சரஸ்வதி மற்றும் செய்யூர் எம் எல் ஏ பாபு ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்,

இதே போன்று கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதிகளில் ஆற்று நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வருவாய் துறையினர் மூலம் அனுப்பி வைக்க பட்டனர்.

Tags

Next Story
ai solutions for small business