கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி பலி

கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி பலி
X

துலுக்காணம்

மதுராந்தகம் அருகே வேட்டூர் கிராமத்தில், கிணற்றில் விழுந்த பசு மாட்டை காப்பாற்றச் சென்ற விவசாயி உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே செய்யூர் அடுத்த வேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர், விவசாயி துலுக்காணம், 78. இவர், தனது கால்நடைகளை அப்பகுதி வயலில் மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். அப்போது பசுமாடு ஒன்று, விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

பதறிப்போன துலுக்காணம், கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற முயன்றார்; நீச்சல் தெரியாத நிலையில் கிணற்றில் மூழ்கி அவர் பலியானார். சம்பவ இடத்துக்கு வந்த செய்யூர் தீயணைப்பு படையினர், விவசாயி துலுக்காணத்தின் உடலை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!