சித்தாமூர் அருகே ஊராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சித்தாமூர் அருகே ஊராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
சித்தாமூர் அருகே ஊராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட இந்தலூர் ஊராட்சியின் பெரியார்நகர், அண்ணாநகர், எம்ஜிஆர்நகர், ஆகிய பகுதியில் சுமார் ஐந்தாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதிகளில் உள்ள மின் மோட்டார்களை சரி செய்ய வேண்டும், மின் விளக்குகளை அமைத்திட வேண்டும், சுடுகாட்டுப் பாதையை சீரமைத்தல், மற்றும் இருளர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் வசதி அமைத்து தராததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!