விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இருளர் இன மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  இருளர் இன மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
X

புதுப்பட்டினம் பேருந்து நிலையத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இருளர் இன மக்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

புதுப்பட்டினத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முன்னிட்டு இருளர் இன மக்களுக்கு பொங்கல் பண்டிகை பொருட்கள் வழங்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பேருந்து நிலையத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இருளர் இன மக்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாணவரணி தலைவர் நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்டத் தலைவர் செங்கை சூரிய நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய பெயர் பலகை திறந்து வைத்து கொடியேற்றினர்.

பின்னர் ஏழை எளிய இருளர் இன மக்களுக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு நிவாரண பொருட்களான பானை குடம் பாய் மற்றும் பொங்கல் செய்ய தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தேவா ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், ரமேஷ்,முத்து, பாசில், சூர்யா, வினோத் மற்றும் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare