தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் சென்னையில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் முறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் நலவாரிய உறுப்பினர்கள் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஆகியவற்றுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 3 ம் தேதி மதுராந்தகம் சூணாம்பேடு ரோடு அரசு மருத்துவமனை அருகில் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை செய்யூர் சால்ட்டு ரோடு பஸ் நிலையம் அருகில் அரசு ஆரம்ப பள்ளியில் காலை 8 மணி முதல் 11 மணி வரை திருக்கழுக்குன்றம் பெரிய தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கொரோனா தடுப்பூசி முகாமை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் மதுராந்தகம் தமிழ்நாடு கட்டுமான உடலுழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்க மாநில தலைவர் வி.ஜெ.குமார், மாநில பொதுச்செயலாளர் எம்.எல்.ராஜசேகர், மாநிலபொருளாலர் எ.ஜான்விஜயகுமார், மற்றும் மாநில செயற்குழு நிர்வாகிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இருக்கும் நமது கட்டுமான தொழிலாளர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலித்துக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu