செய்யூர் அருகே மணமை பகுதியில் சிங்கிள் டீச்சர் ஸ்கூல் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

செய்யூர் அருகே மணமை பகுதியில் சிங்கிள் டீச்சர் ஸ்கூல் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்
X

செங்கல்பட்டு மாவட்டம் மணமை ஊராட்சியில் ஓராசிரியர் பள்ளி அமைப்பின் சார்பாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

செய்யூர் அருகே மணமை பகுதியில் சிங்கிள் டீச்சர் ஸ்கூல் சார்பில் ஏழைகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி மற்றும் மணமை ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் இருளர் மக்களுக்கு சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் அங்கமான ஓராசிரியர் பள்ளிகளின் சமுதாய பணிகள் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 1200 கிராமங்களில் கல்வி பணியாற்றி வருகிறது. இதன்மூலம் 34,500 மாணாக்கர்கள் பயனடைந்து வருகின்றனர்.

கல்வி பணியுடன் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பல்வேறு பணிகளை கடந்த 15 வருடங்களாக தொடர்ந்து ஓராசிரியர் பள்ளி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த கிராம அபிவிருத்திக்கான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதுடன் கொரோனா காலத்தில் 7500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரூபாய் 38 இலட்சம் செலவில் வழங்கப்பட்டன,

ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக ஓராசிரியர் பள்ளிகளின் மூலம் வழங்க அமெரிக்காவை சேர்ந்த இந்தியா டெவலப்மெண்ட் அண்ட் ரிலீஃப் பண்டு அளித்த மளிகைக் பொருட்கள் அடங்கிய பைகளும் 230 நபர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓராசிரியர் பள்ளிகளின் பொறுப்பாளர்கள் விஜயராகவன், வைத்தியநாதன், மகேஷ் , கள மேற்பார்வையாளர் சீனிவாசன், குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture