கல்பாக்கம் அருகே 3 கோவில்களில் கொள்ளை

கல்பாக்கம் அருகே 3 கோவில்களில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த முகையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கிராம தேவதை கோயில்கள் உள்ளன. இந்த 3 கோயில்களிலும் நேற்று இரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 3 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் கோயில் பீரோவில் இருந்த ரூ1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்குச் சென்றுள்ளனர்.மேலும் அருகில் உள்ள மற்ற இரண்டு கோயிலில்களின் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன. அக்கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்