செங்கல்பட்டு சூனாம்பேடு அருகே பதுக்கி வைத்திருந்த எரிசாராயம் பறிமுதல்!

Sunambedu
Sunambedu-செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 வெள்ளை நிறங்களில் சட்டவிரோதமாக எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அச்சரப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு சூனாம்பேடு ஏரிகரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் காவல்துறையினரின் சோதனையில் 35 லிட்டர் கொண்ட 12 வெள்ளைநிற கேன்களில் எரிசாராயம் மற்றும் ஒரு இருசக்கர சிக்கியது. மேலும் எரிசாராய கேன்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து சூனாம்பேடு காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu