செங்கல்பட்டு: பவுஞ்சூர் மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை மையம் தொடக்கம்

செங்கல்பட்டு: பவுஞ்சூர் மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை மையம் தொடக்கம்
X

பவுஞ்சூர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பவுஞ்சூர் மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பவுஞ்சூர் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் அனைத்து வசதிகள் மட்டுமல்லாமல் ஆக்சிஜன் சிலிண்டர் கூடிய 20 படுக்கைகள் கொண்ட கொரோனோ வைரஸ் நோயாளிகளுக்கான சிகிச்சை அளிப்பதற்கான மையம் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த மையத்தினை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் எ.இ.கங்காதரன் ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்யூர் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட கொரோனா வைரஸ் பராமரிப்பு சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர்பாபு, தனது சொந்த செலவில் அறக்கட்டளையின் சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கினார். இந்த மையத்தில் நோயாளிகள் சேர்ப்பது குறித்து வெகுவிரைவில் மாவட்ட தலைமை அறிவுறுத்தலின்படி இயங்கும் என வட்டார மருத்துவ அலுவலர் கங்காதரன் தெரிவித்தார்.

Tags

Next Story
ai marketing future