நீலகண்டபுரம் ஏரி வழியே ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை: வேட்பாளர் உறுதி

நீலகண்டபுரம் ஏரி வழியே ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை: வேட்பாளர் உறுதி
X

ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வா.கோபாலக்கண்ணன், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆத்தூர் ஊராட்சி, நீலகண்டபுரம் ஏரி வழியாக விவசாயிகள் ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை செய்யப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, பூட்டுசாவி சின்னத்தில் ஆத்தூர் வா.கோபாலக்கண்ணன் போட்டியிடுகிறார். வரும் அக்டோபர் 9-ம் தேதி நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குகள் சேகரிக்க, ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நடுத்தெரு, பெருமாள்கோவில் தெரு, அக்ரகார தெரு, கிழக்குதெரு, பாதராகுல தெரு, அங்கன்வாடி தெரு, குலக்கரைதெரு, மேட்டுதெரு, உள்ளிட்ட பகுதியில், அவர் பிரசாரம் செய்தார்.

அப்போது கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பேசும்போது, தன்னை வெற்றி பெறச்செய்தால், ஆத்தூர் ஊராட்சியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். நீலகண்டபுரம் ஏரி இடையே விவசாயிகள் ஈடுபொருள் கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகிறனர். அதற்கு தீர்வு காணப்படும் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!