செங்கல்பட்டு: அதிமுக சார்பில் பெற்றோரை இழந்த 250 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

செங்கல்பட்டு: அதிமுக சார்பில் பெற்றோரை இழந்த 250 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!
X

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுதாகர், மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறார்.

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பெற்றோரை இழந்த ஏழை எளிய மாணவ மாணவிகள் 250 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

செங்கல்படுடு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பல் தலைமை அலுவலகத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா மாவட்ட தலைவர் மு.சுதாகர் தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு படித்து விட்டு உயர்கல்வி படிக்க முடியாமல் தனது படிப்பை பாதியிலயே நிறுத்தியிருக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் தாய், தந்தையை இழந்த மாணவர்கள், ஏழை எளிய மாணவர்களை கண்டறிந்தும், மாணவர்களின் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு 250 மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணத்தையும் அவர்களின் குடுமப சூழலுக்கு ஏற்ப கல்வி உதவி தொகையை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவர் மு.சுதாகர் வழங்கினார்.

இந்நிகழ்வில் க.விஜய் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாவட்டத்தில் இவர்களின் சேவை அப்பகுதி மக்களிடையே பாராட்டபட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!