கூவத்தூர் அருகே பஸ்கள் நேருக்குநேர் மோதல்: 4 பேர் பலி - 6 பேர் படுகாயம்

கூவத்தூர் அருகே பஸ்கள் நேருக்குநேர் மோதல்: 4 பேர் பலி - 6 பேர் படுகாயம்
X
கூவத்தூர் அருகே, தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்குநேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்த இராமாபுரம் கிராமத்தை சேர்ந்த நபர்கள் கல்பாக்கம் பகுதியில் நடைபெற இருந்த நிச்சய தார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்ற பேருந்து, கூவத்தூர் அடுத்த காத்தான்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 6 நபர்கள், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்