கிழக்கு கடற்கரை சாலையில் இன்று அதிகாலை விபத்து: பெண் மருத்துவர் உயிரிழப்பு

கிழக்கு கடற்கரை சாலையில் இன்று அதிகாலை விபத்து:  பெண் மருத்துவர் உயிரிழப்பு
X

விபத்துக்குள்ளான கார்

கிழக்கு கடற்கரை சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட காா் விபத்தில் சென்னையை சோ்ந்த பெண் மருத்துவர் உயிரிழந்தார்,மற்றொருவர் படுகாயம்

சென்னை நும்பல் செல்வகணபதி நகரை சோ்ந்தவா் எஸ்தா் வனிதா(36).இவா் பெண் டாக்டா். இவருடைய நண்பா் டாக்டா் ஶ்ரீகிருஷ்ணா(29). சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சோ்ந்தவா்.

டாக்டா்களான இவா்கள் இருவரும் இன்று அதிகாலை சிதம்பரம் மருத்துவக்கல்லூரியிலிருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டனா். பெண் டாக்டா் எஸ்தா் வனிதா காரை ஓட்டினாா். டாக்டா் ஶ்ரீகிருஷ்ணா அருகில் அமா்ந்து வந்தாா். காா் இன்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலையில் சூனாம்பேடு போலீஸ் நிலைய எல்லையில் கொளத்தூா் செக்போஸ்ட் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த பெண் டாக்டா் எஸ்தா் வனிதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா்.மற்றொரு டாக்டா் ஶ்ரீகிருஷ்ணா படுகாயமடைந்து கிடந்தாா். பின்னால் வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுப்பட்டனா். போலீஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனா்.

சூனாம்பேடு போலீசாா் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதைப்போல் காயமடைந்த டாக்டா் ஶ்ரீகிருஷ்ணாவும்,சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

சூனாம்பேடு போலீசாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா். காரை ஓட்டிவந்த பெண் டாக்டா் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டி வந்திருக்கலாம், அதன் காரணமாக காா் சாலையை விட்டு இறங்கி, பள்ளத்திற்குள் பாய்ந்து, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசாா் கூறுகின்றனா்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி