அச்சிறுபாக்கம் ஆரோக்கிய மழைமலை மாதா விழாவை எளிய முறையில் நடத்த முடிவு

அச்சிறுபாக்கம் ஆரோக்கிய மழைமலை மாதா அருள் விழா மிக எளிய முறையில் கொண்டாட ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சிறுப்பாக்கத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆரோக்கிய மழைமலை மாதா திருக்கோவில் விழாவை கொரோனா தொற்று காரணமாக மிக எளிய முறையில் கொண்டாட ஆலய நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 30 ம் தேதி முதல் அக்டோபர் 4 ம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது. மிக எளிய முறையில் நடைபெறுவதால் தேர் வீதி உலா முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த இவ்விழாவை அதிக அளவில் பக்தர்களை சேர்க்காமல் பக்தர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே மழைமலை மாதா பூடியூப் சேனல் மூலம் நேரலையாக விழா நிகழ்ச்சிகளை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் ,அது போல கட்டாயம் வரும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கொரோனா தொற்று காரணமாக மலை ஏறுவது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் இரவு நேரத்தில் தங்கவும் அனுமதி இல்லை. அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இவ்விழா மிக எளிய முறையில் கொண்டாடப்படும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்