கல்பாக்கம் அருகே 2 போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 4 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே பூந்தண்டலம் கிராமம் மற்றும் நெய்க்குப்பி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி மதுபான ஆலை.
கடந்த சில மாதங்களாக போலி மதுபானங்கள் உலாவுவதாக செங்கல் பட்டு மத்திய நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளர் சுப்புலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சென்னை மண்டல மதுவிலக்கு பிரிவு கண்காணிப்பாளர் பெருமாள் ஆகியோர் தலைமையில் விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு குழுவினருடன் தீவிர புலண் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கல்பாக்கம் அருகே பூந்தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள சதுங்கப்பட்டிணம் காவல் நிலையம் பின்புறம் ஒதுக்குப் புறமாக வயல்வெளிகள் அமைந்த பகுதியில் உள்ள பங்களா வீட்டில் ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அங்கு சோதனை செய்தனர்.
அப்போது போலி மதுபானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் நெய்குப்பி கிராமத்தில் ஒரு ஆலை செயல்படுவதையும் அறிந்தனர். பின்னர் போலீசார் இரண்டு இடங்களிலும் சேர்த்து 5100 குவாட்டர் போலி மதுபானங்கள் மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படும் ஆர் எஸ் எனப்படும் ரசாயனம் 5 மூட்டை, 1500 லிட்டர் ஆர்.எஸ் ரசாயனக் கேன், ( 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 44 கேண்) மதுபானம் தயாரிக்க பயன்படும் இயந்திரம் ,ஸ்டிக்கர், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்து, போலி மது பானங்கள் தயாரிக்க மூலக்கூறுகள் எங்கிருந்து பெறப்படுகின்றன. இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து. விசாரணை மேற்கொண்டுள்ளனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu