டாஸ்மாக் மேலாளரிடம் கொள்ளை, 2 பேர் கைது

டாஸ்மாக் மேலாளரிடம் கொள்ளை, 2 பேர் கைது
X

மதுராந்தகம் அருகே டாஸ்மாக் மேலாளரை கத்தியால் தாக்கி பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் செய்யூர் அருகே உள்ள பாலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடையில் மேலாளர் சுரேஷ்குமார்,சங்கர் ஆகிய இருவரும் மதுக்கடையை மூடி விட்டு இரவு 11 மணியளவில் ரூ 7 லட்சத்து 80 ஆயிரம் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அம்மனூர் என்ற இடத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், இருவரையும் கத்தியால் சரமாரியாக தாக்கிடு அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்யூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் நயினார் குப்பம் பகுதியை சேர்ந்த ஏழுமலை, மடையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த் அப்பு, ராகுல் ஆகிய ஆறு பேரை செய்யூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்கினர். 6 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story