கல்குவாரிக்கு எதிர்ப்பு- கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

கல்குவாரிக்கு எதிர்ப்பு- கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
X

மதுராந்தகம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி அறவழி போராட்டத்தை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குன்னத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தச்சூர் நீலமங்கலம் குன்னத்தூர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் தச்சூர் செங்கல்பட்டு சாலையில் 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கல்குவாரியால் காற்று மாசு அதிகரிக்கும் நீர் ஆதாரம் பாதிக்கப்படும். குறிப்பாக ஆளும் கட்சிக்கு சம்பந்தப்பட்ட கல்குவாரி என்பதால் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும் இதில் இயக்கப்படும் லாரிகளால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture