லாரி- ஆட்டோ மோதி விபத்து- ஏழு பேர் படுகாயம்

லாரி- ஆட்டோ மோதி விபத்து- ஏழு பேர் படுகாயம்
X

கல்பாக்கம் அருகே லாரியும் ஷேர் ஆட்டோவும் மோதிக்கொண்டதில் அதில் பயணம் செய்த இரண்டு பள்ளி மாணவர்கள் உள்பட ஏழு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து பவுஞ்சூர் நோக்கி சென்ற லாரியும் கூவத்தூரில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த ஷேர் ஆட்டோவும் சாலையின் குறுக்கே கடக்கும் போது மோதிக்கொண்டதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த கூவத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏழு பேர் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!