செங்கல்பட்டு: இன்று முதல் ஆர்வமுடன் பள்ளிகளில் பணிகளை துவக்கிய ஆசிரியர்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர்கள் நிர்வாக பணிகளை தொடங்கினர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இன்றுமுதல் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிகாலை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று தமிழகத்தில் சுமார் 2000 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்பதும், குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தற்போது சிகிச்சைகள் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிகளுக்கு வருகை தந்து நிர்வாக பணிகளில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதில் தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு சுருக்கெழுத்து நிலையங்கள் 50 சதவீத மாணவர்கள் உடன் செயல்பட அனுமதி என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து பணிகள் தொடங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களது பணிகளை ஆர்வமுடன் முகக்கவசம் அணிந்தபடி துவக்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu