நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி
நந்தீஸ்வரர் கோவில்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கிராமத்தில் பழமை வாய்ந்த நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இந்த கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய நிலங்கள் நந்திவரம் கிராமத்தில் உள்ளன. கோவில் நிலங்களில் பலர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். மேலும் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள கோவில் நிலத்தில் பலர் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி இயக்குனர் சேகர், நந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி நடந்தது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நந்திவரம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஏராளமான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் கடைகளும் கட்டப்பட்டுள்ளன. முதல் கட்டமாக நிலம் அளவிடும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முழுமையாக முடிந்த பிறகு கோவில் நிலத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு எவ்வளவு வாடகை விதிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu