செங்கல்பட்டு மாவட்டத்தை குளிர்வித்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

செங்கல்பட்டு மாவட்டத்தை குளிர்வித்த  மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழை.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் வெயிலின் வெப்பம் தணிந்து குளிர்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் தொடர்ந்து வட தமிழக மான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதியான சோழிங்கநல்லூர், வேளச்சேரி, செங்கல்பட்டு, குரோம்பேட்டை, பல்லாவரம், பள்ளிக்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், திருநீர்மலை, படப்பை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

குளிர் காற்று வீசி வந்த நிலையில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் திடீரென சூரைக்காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. கோடைகாலத்தில் பெய்துவரும் இந்த மழையால் காய்ந்து உள்ள நீர்நிலைகள் சற்றே நீர் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil