மீண்டும் போக்சோவில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா: மேலும் ஒரு மாணவி பரபரப்பு புகார்

மீண்டும் போக்சோவில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா: மேலும் ஒரு மாணவி பரபரப்பு புகார்
X

செங்கல்பட்டு நீதி மன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா

மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் கொடுத்ததன் பேரில் மீண்டு போக்சோ சட்டத்தில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதி மன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டர்.

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மேலும் ஒரு, 'போக்சோ' வழக்கில், சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா,.

இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே, 'போக்சோ' உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், சி.பி.சி.ஐ.டி., போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்தும் விசாரித்தனர்.தற்போது இவரால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமியான, மாணவியின் சகோதரிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த புகாரில், சிவசங்கர் பாபா மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேலும் ஒரு போக்சோ வழக்குப் பதிந்து நேற்று முன் தினம் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்று செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி தமிழரசி மீண்டும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி