மாணவியின் தாயாருக்கும் பாலியல் தொல்லை, சிவசங்கர் பாபா மீது மேலும் வழக்கு

மாணவியின் தாயாருக்கும் பாலியல் தொல்லை, சிவசங்கர் பாபா மீது மேலும் வழக்கு
X

சிவசங்கர் பாபா பைல் படம்

மாணவியின் தாயருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் தனியார் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 40 பேர் சாட்சியங்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் மாணவியின் தாயாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவி ஒருவர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு போக்சோ வழக்கு மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!