மணல் குவாரிகள் திறக்க வேண்டும் : லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோயிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு. காஞ்சிபுரம். திருவாள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள லாரி உரிமையாளர்களுக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சார்பில் தமிழ்நாடு அரசு மணல் குவாரிகளை திறந்திட வலியுறுத்தி ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலாவதாக லாரிகளில் அதிக பாரங்களை ஏற்றமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அதிகபாரம் ஏற்றிவரும் வாகனங்களுக்கு ரூ,50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். இதனை தடுக்க, இனி லாரிகளில் அதிக பாரத்தை ஏற்றுவதை தவிற்க்க இன்று உறுதிமொழி எடுத்துதுக்கொண்டோம்.
மணல் தட்டுப்பாடு காரணமாகவே தமிழகத்தில் பல கட்டுமானங்கள் தரமின்றி கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அதிகமான கிராஷர்களை உறுவாக்கி மணலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அரசு சார்பில் மலேசியா மணல் விற்பனையை நேற்றைய தினம் துவங்கியது போல்,
தமிழகத்தில் 24 மணல் குவாரிகளை திறந்திட வழிவகை ஏற்படுத்திடவேண்டும் அப்போதுதான் கட்டுமானத்திற்கான உறுதித்தன்மையான மணல் கிடைக்கும். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மணல் குவாரிகளை திறக்க உத்தரவிடவேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் இருமுறை வெள்ளம் வந்துள்ளது ஆகையால் ஆறுகளில் மணல் குவிந்துகிடக்கிறது. ஆறுகளில் மணல் குவாரிகளை திறக்காத காரணமாக மணல் கடத்தல் நடைபெறுவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ, 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மணல் குவாரிகளை திறந்து தமிழக அரசு மணலை விற்பணைக்கு கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu