கெட்டுப்போன உணவு பண்டங்கள் விற்பனை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கெட்டுப்போன உணவு பண்டங்கள் விற்பனை:  நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
X

செங்கல்பட்டில் கெட்டுப்போன உணவு வழங்கும் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு அருகே கெட்டுப்போன உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு அருகே தனியார் துரித உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சிகளை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பணை செய்வதாகவு அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மஹேந்திராசிட்டி அருகே செட்டிபுண்ணியம் செல்லும் வழியில் தனியார் துரித உணவகம் செயல்பட்டு வருகிறது. அருகில் உள்ள மஹேந்திராசிட்டி பூங்காவில், ஐ.டி பார்க், உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு அதிக அளவில் ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இங்கு பணிபுரிபவர்கள், மற்றும் உள்ளூர் மக்கள் அருகில் உள்ள இந்த உணவகத்திற்கு வந்து உணவுப் பண்டங்களை வாங்குவது வழக்கம்.

இந்த நிலையில் தினந்தோறும் இவ்உணவகத்தில், கெட்டுப்போன இறைச்சிகளை வைத்து சமைத்து பிரியாணி, துரித உணவு, என பலவகை உணவு பண்டங்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாகவும் இதன் காரணமாக அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு வாந்தி மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

அந்த உணவகத்தின் உரிமையாளரிடம் வாடிக்கையாளர்கள் கேட்டால் ஒருமையில் பேசி வாடிக்கையாளர்களை தாக்க முயற்ச்சிப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் பல உணவகங்களில் தற்போது கெட்டுப்போன இறைச்சிகளை உண்ட பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

அதுபோல இங்கும் நடக்காவண்ணம் உணவுத்துறை அதிகாரிகள் அந்த தனியார் துரித உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!