செங்கல்பட்டு: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது

செங்கல்பட்டு: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது
X

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி விக்னேஷ் கைது

செங்கல்பட்டு: சிறுமியை கடத்தி மூன்று மாதங்களாக தனி அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது

செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் இதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரின் மூத்த மகளான 12ஆம் பகுப்பு படித்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த அச்சிறுமி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது தந்தை செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காணாமல்போன சிறுமியை காவல்துறையினர் தேடிவந்தனர்.

இந்த நிலையில், அதே பகுதியில் வசித்துவரும் பிரபல ரவுடியான விக்கி (ஏ) விக்னேஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வீட்டில் தனியே இருந்த அச்சிறுமியை கடத்திச் சென்று கடந்த மூன்று மாதங்களாக தனி அறையில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்ததாக அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அச்சிறுமியை போலீசார் மீட்டனர்.

மேலும் சிறுமியை கடத்திச் சென்று தனி அறையில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விக்னேஷ் மீது காவல்நிலையங்களில் கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொள்ளை என ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், மேலும் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என தாலுக்கா போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!