தொடரும் கனமழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 ஏரிகள் 100% நிரம்பின

தொடரும் கனமழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 ஏரிகள் 100% நிரம்பின
X

கோப்பு படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் 40 ஏரிகள் 100% நிரம்பின.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளன. இதில், 40 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன. 75 சதவீதத்துக்கு மேல், 32 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 102 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு மேல் 145 ஏரிகளும், 25 சதவிகிதத்துக்கும் கீழ் 145 ஏரிகள் நிரம்பி உள்ளன. ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்வதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாக, பொதுப்பணித்துறை சார்பிலும், நீர்வள ஆதாரத்துறை சார்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture