பூவை மூர்த்தி நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பூவை மூர்த்தி நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய புரட்சி பாரதம் கட்சியினர்.

செங்கல்பட்டில் பூவை மூர்த்தியின் 19வது நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை எம். மூர்த்தியின் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு, இராட்டிணகிணறு, ஒழலூர், நத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்சி கொடியேற்றியும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அக்கட்சியினர் வழங்கினர்.

அபே ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டத் தலைவர் சி.கே மூர்த்தி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கான கபடி விளையாட்டுக்கள், மாணவ மாணவியருக்கான அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பைகளும் நற்ச்சான்றுகளும் வழங்கப்பட்டன.

மாநில துணை பொதுச் செயலாளர் விசு, மாவட்ட துணை செயலாளர் மதன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் தீபன், செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் நாஜேந்திரபாபு, உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பூவை மூர்த்தியின் சிறப்புகள் குறித்தும், சாதனைகள் குறித்தும் பேசினர். மேலும், ஏழுமலை, சக்தி, மணிபாரதி, முருகன், வீரமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!