செங்கல்பட்டு அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

செங்கல்பட்டு அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
X

ஒழலூர் நாவிதர் நகரில் செல்பாேன் டவர் அமைக்க பாெதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை தடுத்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு.

செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் நாவிதர் நகரில் நூற்றுக்கணக்கானவர்கள் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளின் நடுவே தனியார் செல்போன் டவர் அமைக்க கடந்த இரண்டு நாட்களாக பொக்லைன் இயந்தரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டினர்.

இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை அந்த இடத்திற்கு சென்று பள்ளம் தோண்டுபவர்களிடம் இங்கு செல்போன் டவர் அமைக்க கூடாது கூறியுள்ளனர். இதையும் மீறி இன்று பள்ளம் தோண்டினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அவர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுக்கா சப் இன்ஸ்பெக்டர் சங்கர் ஒழலூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தினர்.

கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள், குடியிருப்பு பகுதியில் டவர் அமைக்க கூடாது என்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். அதையும் மீறி பள்ளம் தோண்டுகிறார்கள். குடியிருப்பு நிறைந்த இந்த பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் கதிர்வீச்சு ஏற்பட்டு குழந்தைகள் கர்ப்பிணிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எவ்வித அரசு அனுமதி இன்றியும் வருவாய்த்துறை ஊராக வளர்ச்சித்துறை அனுமதியுமின்றி சட்ட விரோதமாக டவர் அமைக்கிறார்கள் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இதற்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தை மூடவேண்டும் இல்லையென்றால் குழந்தைகள் முதியவர்கள் பள்ளத்தில் விழுந்து பலியாகும் நிலை ஏற்படும், இல்லையென்றால் பொதுமக்கள் பெண்கள் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். இதனை கேட்ட அதிகாரிகள் இந்த பணியை நிறுத்தினர். இதற்காக எந்த ஒப்புதல் கடிதமும் அரசிடம் பெறாததாலும் குடியிருப்பு பகுதியில் அமைக்கவும் கூடாது பள்ளத்தை உடனடியாக மூடவும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 3மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் வீடு கட்டி குடியிருக்க அரசு சார்பில் கொடுக்கப்பட்ட இடத்தில் வணிக ரீதியாக பொதுமக்களுக்கு கதிர் வீச்சுபாதிப்பு ஏற்படுத்தும் செல்போன் டவர் அமைக்க கூடாது என்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு