நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள்

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள்
X
நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றாதது ஏன்? கூடுவாஞ்சேரி மக்கள் சரமாரி கேள்வி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, மீனாட்சி நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் 60அடி அகலமுள்ள நீர் வரத்து கால்வாய் உள்ளது. இக்காயில் மறைமலைநகர், வல்லாஞ்சேரி, கூடுவாஞ்சேரி, தைலாவரம், நின்னக்கரை ஆகிய பகுதிகளில் இருந்து மழை காலங்களில் வெள்ள நீர் செல்ல ஏதுவாக பொதுப்பணித்துறையினர் அமைத்துள்ளனர்.

இக்கால்வாயை அடைத்து, அங்குள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கடந்த 15 ஆடுகளாக ஆகிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். இதன் காராணமாக மழைகாலங்களில் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை விளைவிக்கிறதாக கூறி அப்பகுதி மக்கள் பலமுறை துறைரீதியான அதிகாரிகளிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.

ஆனால் அதிகாரிகள் முறைகாக நடவடிக்கையை மேற்கொள்ளாத காரணமாக, கடந்த 2015ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்கு தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

ஆனால் பெயரளவிற்கே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும், அதிகாரிகள் அந்த தனியார் பள்ளிக்கு துணை போவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். மேலும் இதன் காராணமாக மழைகாலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீரானது புகுந்து கடுமையான சேதத்தை விளைவிக்கின்றது. மேலும் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் முக்கிய இரண்டு சாலைகளை அத்தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாகவும் இதன் காராணமாக நீண்ட தூரம் சுற்றிச் செல்க்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

எனவே தனியார் பள்ளி ஆக்கிரமித்துள்ள நீர் பிடிப்பு கால்வாயை மீட்டு மழைகாலங்களில் ஊருக்குள் வெள்ள நீர் புகாமல் இருக்க அதிகாரிகள் வழிவகை செய்யவெண்டும், மேலும் அப்பள்ளி ஆக்கிரமிப்பில் உள்ள இரண்டு தெருக்களையும் மீட்டெடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
ai solutions for small business