நேபாள தடகள போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம், மறைமலைநகர் மாணவர் அசத்தல்

நேபாள தடகள போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம், மறைமலைநகர் மாணவர் அசத்தல்
X

நேபாளத்தில் நடந்த தடகள போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற மறைமலை நகர் கல்லூரி மாணவர்

நேபாளத்தில் நடந்த தடகளப் போட்டியில் இந்தியாவுக்காக 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று, மறைமலைநகர் கல்லூரி மாணவர் அசத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே சட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அஜயன் ஜான் மற்றும் கஸ்தூரி என்பவர்களின் மகன் செல்டன் ஜான் இவர் நேபாளத்தில் நடைபெற்ற யுனைட்டட் இன்டர்நேஷனல் சம்பியன்ஷிப் நேஷனல் ஸ்போட்ஸ் கவுன்சில் ஆஃப் நேபால் மற்றும் இண்டஸ்ட்ரி ஆர்கனைசேஷன் சார்பில் நேபாளத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர்கள் பங்கு பெற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே சட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்டன் ஜான் என்பவர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற்று முதல் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டியில் தாய்லாந்து ஸ்ரீலங்கா துபாய் சிங்கப்பூர் மலேசியா நேபால் உள்ளிட்ட எட்டு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கு பெற்ற இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து இந்தியாவிற்கு தங்கம் வென்றுள்ளார்.

நான்கு வயது முதலே ஓட்ட பந்தயத்தில் தீராத பற்று கொண்டு 12 வருடங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டு இந்தியாவிற்காக தங்கத்தை வென்றுள்ளது செல்டன் ஜான் பெருமைப்பட தெரிவித்திருக்கிறார்.

மேலும் முறையான பயிற்சி இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் தங்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தங்கம் வெல்வதே தனது இலக்காக பயணிப்பதாக செல்டன் ஜான் உறுதியோடு பயிற்சி மேற்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் அரசு சார்பில் இது போன்ற வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து ஒலிம்பிக்கில் பங்கு பெறச் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!