உள்ளாட்சித் தேர்தல் பணியில்16 ஆயிரம் பேர்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

உள்ளாட்சித் தேர்தல் பணியில்16 ஆயிரம் பேர்:  செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
X

செங்கல்பட்டு மாவட்ட வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் இன்று வெளியிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடைபெறவுள்ள 2021க்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு புகைப்படத்துபன் கூடிய வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இன்று வெளியிட்டார்.

முதல் பிரதியை செங்கல்பட்டு மாவட்ட ஊரக வார்ச்சி முகமை இணை இயக்குநர் (திட்ட இயக்குநர்) சா.செல்வகுமார் பெற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மற்றும் உள்ளாட்சி தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர். இதே போன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி. ஒன்றியங்களிலும், 359 கிராம ஊாட்சிகளிலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் இன்று வெளியிடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2034 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்படி வாக்குச்சாவடிகளில் மொத்தம். 11,54,933 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவற்றில் ஆன் வாக்காளர்கள் 5,09;502-ம், பெண் வாக்காளர்கள் 5,85,163-ம், இதர வாக்காளர்கள் 187 அடங்குவர். 2034 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு, அலுவலர்களாக சுமார் 16,208 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் வரை, வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள், தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப் பதிவு அலுவலரிடம் பெறப்பட்டு, ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலுக்கு, துணைப் பட்டியல்கள் வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!