காட்டாங்குளத்தூர் பிடிஓ இருவர் ஒரேநாளில் திடீர் பணியிட மாற்றம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஒன்றியங்கள் உள்ளன. இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் சார்ந்த பணிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களான டி.ஹரிகிருஷ்ணன் மற்றும் ஆ.சசிகலா செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் நேற்று, இவர்கள் இருவரின் பணிமாற்றத்திற்கான ஆணையை வழங்கியது.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், அதிகபட்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்கான பணி செய்யக்கூடிய அதிகாரிகள் என்ற பெயர் இவர்கள் இருவருக்கும் உள்ளது. இந்த சூழலில் திடீரென இருவரும் மாற்றப்பட்டுள்ளது, மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரின் பணி மாற்றம் ஆணையை, மாவட்ட நிர்வாகம் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தை சார்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu