விவசாயத்தை பாதிக்கும் கல்குவாரி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் மனு

விவசாயத்தை பாதிக்கும் கல்குவாரி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் மனு
X

கல்குவாரியால் விவசாயம் பாதிப்பதாக செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு அளிக்க வந்தபோது கோரிக்கை முழக்கமிட்டனர்

 விவசாயிகள்

பூமிக்கடியில் 200 அடி ஆழத்திற்கு மேல் கல் உடைத்து வருவதால், அருகில் உள்ள 80 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களை பாதிக்கும் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், ஆக்கினாம்பட்டு கிராமத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கல் குவாரி பூமிக்கடியில் 200 அடி ஆழத்திற்கு மேல் கல் உடைத்து எடுத்து வருவதால், அருகில் உள்ள 80 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு நீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது.

கல்லுடைக்கும் இயந்திரத்தை அத்துமீறி அப்பகுதியில் வைத்து கல்லுடைத்து வருவதால், அதிலிருந்து வரும் கல் தூசி விவசாய நிலங்களில் தொடர்ந்து படர்ந்து வருவதால் விவசாயம் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படும் கல் குவாரியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கத்தின் செய்யூர் வட்டச் செயலாளர் ராஜேந்திரன். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ர.ராகுல் நாத்தை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ராஜா, மாவட்ட செயலாளர் ஜி.மோகனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் எஸ்.ரவி, பாதிப்புக்குள்ளான விவசாயி தனலட்சுமி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself