தேர்தலையொட்டி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

தேர்தலையொட்டி  செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு போலீஸ்  பாதுகாப்பு
X
சட்டமன்றத் தேர்தலையொட்டி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீசார் பாதுகாப்பு

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ம் தேதி தேதி நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

மேலும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அடிக்கடி வந்து செல்வதாலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நேற்று காலை முதல் எஸ்.பி சுந்தரவதனம், ஆலோசனையின்படி செங்கல்பட்டு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!