தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
X
செங்கல்பட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கலக்டரும் தேர்தல் அலுவலருமான ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய கலெக்டர், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான தேர்தல் விதிமுறைகள் பற்றிக் கூறினார். அந்த விதிமுறைகளில் எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளர்கள் சாதி, மதம் மற்றும் மொழி இன வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. சாதி,மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது. வழிபாட்டுதலங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது. இதர கட்சியினர் நடத்தும் கூட்டம் மற்றும் பேரணிகளில் இடையூறு செய்ய கூடாது. அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் கட்சி அலுவலகங்கள் அமைக்க கூடாது.

தேர்தல் அலுவலர்களால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை பின்பற்றி வாகன அனுமதிச் சீட்டினை வெளியில் தெரியும்படி வைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!